You are here: Home > Tutorials > Word Processing > MS Word தனிக்கற்கை - 04
MS Word தனிக்கற்கை - 04

முதலில் WordTutorial-04 எனும் பெயரில் உறை (folder) ஒன்றினை உருவாக்கவும். அதன் பின்பு தனிக்கற்கை 04 இற்குத் தேவையான WordTutorialSupportFile03.doc எனும் கோப்பினை (file) பதிவிறக்கம்(download) செய்து ஏற்கனவே உருவாக்கிய WordTutorial-04 எனும் உறையினுள் (folder) சேமிக்கவும்.

  1. WordTutorialSupportFile03.doc இனைத் திறக்கவும்.
  2. “myWordTutorial-04.doc” எனும் புதிய பெயரில் ஏற்கனவே திறந்த கோப்பினை (file) WordTutorial-04 உறையினுள்(folder) சேமிக்கவும்.
  3. ஆவணத்தின் கடைசியில் பக்க முறிவொன்றினை (page break) இடவும்.
  4. ஆவணத்தின் அடுத்த (இரண்டாவது) பக்கத்தில் கீழ்க்காட்டப்பட்டவாறு பட்டியல் (List) ஒன்றை உருவாக்கவும்.
  5. ஆவணத்தின் முதலாவது பக்கத்தினை கீழ்க்குறிப்பிடப்பட்ட MS-Word கட்டளைகளை பயன்படுத்தி கீழ்க்காட்டியவாறு மறுசீரமைக்கவும்.
    (மேலுள்ள உருவினை உருப்பெருப்பிப்பதற்கு உருவின் மேல் சுட்டிப் பொத்தானை அழுத்தவும்)
    1. சொற் கலையொன்றைச் (Word Art) செருகவும்
    2. Drop cap இனைச் செருகவும்.
    3. ஆயத்தப் படமொன்றைச்(Clip Art) செருகவும். ( From Academic category of the Office Collections)
    4. செருகப்பட்ட படத்தினை நகல் செய்யவும்(copy).
    5. நகல் செய்த படத்தினை வரைதல் கருவிப்பட்டையினை (Drawing toolbar) உபயோகித்து மாற்றியமைக்கவும்.
    6. கடைசி இரண்டு பத்திகளையும் 2-நிரல்களாக வடிவமைக்கவும்.
    7. நிறுவன விளக்கப்படமொன்றைச்(Organization Chart) செருகவும்.
    8. Equation Editor இனைப் பயன்படுத்தவும்.
    9. பக்க குண்டு எல்லையினை (Page Border) இடவும்.
Last Updated ( Monday, 28 April 2008 14:57 )
 
© 2003 - 2008 w3Tamil.com, All Rights Reserved