You are here: Home > Tutorials > Word Processing > MS Word தனிக்கற்கை - 03
MS Word தனிக்கற்கை - 03

முதலில் WordTutorial-03 எனும் பெயரில் உறை (folder) ஒன்றினை உருவாக்கவும். அதன் பின்பு தனிக்கற்கை 03 இற்குத் தேவையான WordTutorialSupportFile02.doc எனும் கோப்பினை (file) பதிவிறக்கம்(download) செய்து ஏற்கனவே உருவாக்கிய WordTutorial-03 எனும் உறையினுள் (folder) சேமிக்கவும்.

  1. WordTutorialSupportFile02.doc இனைத் திறக்கவும்.
  2. திறந்த கோப்பினை “myWordTutorial-03.doc” எனும் புதிய பெயரில் WordTutorial-03 உறையினுள்(folder) சேமிக்கவும்.
  3. உங்களது ஆவணத்திலுள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் தெரிவு (Select All) செய்க.
  4. ஆவணத்திலுள்ள அனைத்து வடிவமைப்புகளையும் துப்பரவாக்கவும் (Clear all Formatting).
  5. “Introduction to Word Processing” எனும் தலையங்கத்திற்கு Heading 1 வடிவினை(style) பிரயோகிக்கவும்.
  6. கீழ்வரும் உப தலையங்கங்களுக்கு Heading 2 வடிவினை(style) பிரயோகிக்கவும்.
    Early 1900s
    1960s
    1970s
    Late 1970s and early 1980s
    Late 1980s
    1990s
    Using word processing software
    Conclusion
  7. Heading 1 வடிவினது(style) கீழ்வரும் இயல்புகளை மாற்றியமைக்கவும்(modify).
    எழுத்துருவகை(Font): Times New Roman
    எழுத்துருவகை அளவு(Font size): 16
  8. Heading 2 வடிவினது(style) கீழ்வரும் இயல்புகளை மாற்றியமைக்கவும்(modify).
    எழுத்துருவகை(Font): Times New Roman
    எழுத்துருவகை அளவு(Font size): 14
  9. Normal வடிவினது(style) கீழ்வரும் இயல்புகளை மாற்றியமைக்கவும்(modify).
    எழுத்துருவகை(Font): Times New Roman
    எழுத்துருவகை அளவு(Font size): 12
    Paragraph:
    • Line spacing: 1.5
    • Space Before: 6pt
    • Space After: 6pt
    • Alignment: Justify
    • Indentation: None
  10. கீழ்வரும் தலையங்கங்களுக்கு முன்பாக பக்க முறிவை(page break) இடவும்:;
    Late 1970s and early 1980s
    Late 1980s
    Conclusion
  11. Heading 2 வடிவினது(style) கீழ்வரும் இயல்புகளை மாற்றியமைக்கவும்(modify).
    எழுத்துருவகை நிறம்(Font color): நீலம்(Blue)
    எழுத்துருவகை வடிவு(Font style): Bold and Italic
  12. மூன்றாவது பக்கத்திலுள்ள (“Late 1970s and early 1980s” எனும் தலையங்கத்தின் கீழ்வரும்) இரண்டாவது பத்தியினை 2 நிரல்களாக (2-column) மாற்றியமைக்கவும்.
  13. மூன்றாவது பக்கத்திலுள்ள மூன்றாவது பத்தியினை 3 நிரல்களாக (3-column) மாற்றியமைக்கவும். நிரல்களிற்கு இடையில் கோடு (line between) இடப்படவேண்டும்.
  14. ஆவணத்திலுள்ள முதலாவது பத்தியினைச் சுற்றி குண்டு எல்லை (border) போடவும்.
  15. அனைத்துப் பக்கங்களும் பக்க குண்டு எல்லையினைக் (page border) கொண்டிருக்க வேண்டும்.
  16. ஆவணத்தின் முதலாவது பக்கத்தில் பொருளடக்க அட்டவணையினை இடவும்.
  17. பொருளடக்க அட்டவணையினைத் தொடர்ந்து பகுதி முறிவினை (Section break) இடவும்.
  18. பொருளடக்க அட்டவணையுள்ள பக்கத்திற்கு பக்க எண்ணை(Page number) ரோமன் இலக்கத்தில் இடவும்.
  19. இரண்டாவது பக்கத்திலிருந்து பக்க எண்களை இந்து அராபிய இலக்கத்தில் இடவும். பக்க எண்கள் 1 இலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். (சாதாரணமாக முன்னைய பகுதியின் தொடர்ச்சியாகவே பக்க எண் இடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது).
  20. பொருளடக்க அட்டவனையினைப் புதுப்பிக்கவும்.
  21. உங்களது ஆவணத்தைச் சேமித்தபின்பு MS Word மென்பொருளை மூடவும்.
Last Updated ( Monday, 28 April 2008 12:38 )
 
© 2003 - 2008 w3Tamil.com, All Rights Reserved