You are here: Home > Tutorials > Word Processing > MS Word தனிக்கற்கை - 02
MS Word தனிக்கற்கை - 02

முதலில் WordTutorial-02 எனும் பெயரில் உறை (folder) ஒன்றினை உருவாக்கவும். அதன் பின்பு தனிக்கற்கை 02 இற்குத் தேவையான WordTutorialSupportFile01.doc எனும் கோப்பினை (file) பதிவிறக்கம்(download) செய்து ஏற்கனவே உருவாக்கிய WordTutorial-02 எனும் உறையினுள் (folder) சேமிக்கவும்.

  1. MS-Word மென் பொருளை திறக்கவும்.
  2. WordTutorialSupportFile01.doc இனை திறக்கவும்.
  3. myWordTutorial-02.doc எனும் புதிய பெயரில் ஏற்கனவே திறந்த கோப்பினை (file) சேமிக்கவும்.
  4. உங்களது ஆவணத்திலுள்ள (myWordTutorial-02.doc) முதலாவது வசனத்தினை நீக்கவும் (Delete செய்யவும்).
  5. உங்களது ஆவணத்திலுள்ள முதலாவது சொல்லை (2008) வெட்டி (cut) ஆவணத்தின் கடைசி வரியாக ஒட்டவும்(paste).
  6. ஆவணத்தின் மேல், கீழ், வலது ஓரங்களை (top, bottom, and right margins) 1”(inch) ஆகவும் இடது ஓரத்தினை (left margin) 1.5”(inch) ஆகவும் மாற்றம் செய்க.
  7. பக்க அளவினை (Paper size) A4 ஆக மாற்றம் செய்யவும்.
  8. பக்க orientation இனை Portrait (முனை நிலைப்படுத்தல்) ஆக மாற்றம் செய்யவும்.
  9. முதலாவது பத்தியின் கடைசி வசனத்தின் எழுத்துருவகை வடிவினை (font style) தடித்த சாய்வு (Bold and Italic) வடிவுக்கு மாற்றம் செய்யவும்.
  10. உங்களது ஆவணத்தின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும் (Select all).
    1. எழுத்துரு வகையினை Arial ஆகவும் எழுத்துருவகை அளவினை (font size) 12 ஆகவும் மாற்றம் செய்யவும்.
    2. அனைத்து பத்திகளின் நேர்ப்படுத்தத்தினை (alignment) ஒருசீர்படுத்தமாக (Justify) மாற்றம் செய்யவும்.
    3. பத்திகளின் உள்தள்ளலினை(indentation) None ஆக அமைக்கவும்.
    4. பத்திகளிற்கு முன்பான இடைவெளியினை (spacing before) 6pt ஆகவும் பின்பான இடைவெளியினை (spacing after) 6pt ஆகவும் மாற்றம் செய்யவும்.
    5. வரி வெளியினை (line spacing) 1.5 lines ஆக மாற்றம் செய்யவும்.
  11. “Introduction to Word Processing” எனும் தலையங்கத்தின் எழுத்துருவகை அளவினை (font size) 16 ஆகவும் எழுத்துருவகை வடிவினை (font style) தடித்த (Bold) வடிவுக்கும் மாற்றம் செய்யவும்.
  12. கீழ்வரும் உப தலையங்கங்களின் எழுத்துருவகை அளவினை (font size) 14 ஆகவும் எழுத்துருவகை வடிவினை (font style) தடித்த சாய்வு வடிவுக்கும்(Bold and Italic) மாற்றம் செய்யவும்.
    Early 1900s
    1960s
    1970s
    Late 1970s and early 1980s
    Late 1980s
    1990s
    Using word processing software
    Conclusion
  13. பக்க எண்ணை ஆவணத்தின் தலைப்பாக (header) இடவும்.
  14. உங்களது பெயரினை ஆவணத்தின் அடிக்குறிப்பாக (footer) இடவும்.
  15. உங்களது ஆவணத்திலுள்ள QWERY எனும் சொல்லை QWERTY ஆக மாற்றம் செய்யவும்.
  16. கீழ்வரும் உப தலையங்கங்களின் எழுத்துருவகை நிறத்தினை (font color) சிவப்பாக மாற்றவும்.
    Early 1900s
    1960s
    1970s
    Late 1970s and early 1980s
    Late 1980s
    1990s
    Using word processing software
    Conclusion
  17. உங்களது ஆவணத்தில் எழுத்துப் பிழைகள் இல்லையென்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  18. உங்களது ஆவணத்தைச் சேமித்தபின்பு MS Word மென்பொருளை மூடவும்.
Last Updated ( Monday, 28 April 2008 15:04 )
 
© 2003 - 2008 w3Tamil.com, All Rights Reserved