இன்றைய சிந்தனை

மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்.

ஆல்பர்ட் ச்வெஇத்ழெர்


MS Word தனிக்கற்கை - 01

MS Word மென்பொருள் பற்றிய முக்கியமான விடயங்களினை இத் தனிக்கற்கைத் (tutorial) தொடர் பயிற்சிகளாகக் கொண்டுள்ளது. இவற்றைப் பயிற்சி செய்வதன் மூலம் MS Word இன் முக்கியமான விடயங்களில் உங்களை நீங்களாகவே பரீட்சித்துக்கொள்ளலாம்.

செயன்முறை படிகள் தற்போதைக்கு இங்கு தரப்படவில்லை. எதிர்காலத்தில் அவற்றினை சேர்த்துக்கொள்ள முயற்சிக்கிறோம். இப்பயிற்சித் தொடர் MS Word 2003 இனை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. எனினும் பிற Word Processing மென்பொருட்களுக்கும் இப்பயிற்சிகள் ஒரளவு பொருத்தமானதாகவே அமையும்.

இனி எமது செயன்முறைப் பயிற்சிகளை ஆரம்பிப்போம். ஆரம்பிக்க முன்பு உங்களது கணினியில் MS Word மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

  1. MS-Word மென்பொருளைத் திறக்கவும்.
  2. பிரயோக சாளரத்தை (application window) கொள்பணி பட்டையில் (task bar) வரும்படி சிறிதாக்கவும் (Minimize).
  3. பிரயோக சாளரத்தை (application window) உச்சப்படுத்தவும் (Maximize).
  4. பிரயோக சாளரத்தை (application window) மறு அளவாக்கம் (Re-size) செய்யவும்.
  5. பிரயோக சாளரத்தை (application window) வேறொரு இடத்திற்கு நகர்த்தவும் (Move).
  6. மறுபடியும் பிரயோக சாளரத்தை (application window) உச்சப்படுத்தவும் (Maximize).
  7. தரக் கருவிப்பட்டையினையும் (Standard toolbar) வடிவமைப்புக் கருவிப் பட்டையினையும் (Formatting toolbar) வெவ்வேறான வரிசையில் (row) வரும்படி செய்யவும்.
  8. வரைதல் கருவிப்பட்டையினை (Drawing toolbar) நீக்கவும்.
  9. கீழ்வரும் பாடத்தை (text) தட்டச்சிடவும்.
    This is the sample text for the Word Lab - 01.
    Most people today must be able to express thoughts or needs via the written word, at least occasionally. It is often desirable to clarify written communication of what has already been committed to paper by refining, rephrasing, and restating it. Word processing can be defined as the manipulation of text data including creating a document, editing/changing it, storing and retrieving it, and printing it. This line is reserved for your full name.
  10. உங்களது ஆவணத்தை (document) “myWordTutorial-01.doc” எனும் பெயரில் “WordTutorial-01” எனும் பெயரில் உருவாக்கும் உறையினுள் (folder) சேமிக்கவும்.
  11. ஆவணத்திலுள்ள முதலாவது வசனத்தை நீக்கவும் (Delete).
  12. “WordTutorial-01updated.doc” எனும் புதிய பெயரில் உங்களது ஆவணத்தை “WordTutorial-01” எனும் பெயரில் ஏற்கனவே உருவாக்கிய உறையினுள் (folder) சேமிக்கவும்.
  13. நிலைகாட்டியை (cursor) உங்களது ஆவணத்தின் கடைசிப்பகுதிக்கு (end of your document) குறுக்குவழிச்சாவியினை (short cut key) பயன்படுத்தி நகர்த்தவும்.
  14. இரு தடவைகள் ஏகு மீள் சாவியை (<ENTER>) அழுத்தவும் (Press).
  15. கீழ்வரும் பாடத்தை (text) தட்டச்சிடவும்.
    Early 1900s
    Word processing during thiss era was generally accomplished by means of handwritten or typewritten pages, but with either method, the process of revising text was difficult and time consuming. Using a typewriter, for example, required retyping the entire page if it contained even one change. Or if time constraints disallowed retyping, using scissors, correction tape, and correction fluuuid, and then copying the patched document on a copy machine before anything approaching a professional lookking document could be achieved.
  16. நிலைகாட்டியை (cursor) உங்களது ஆவணத்தின் தொடக்கப்பகுதிக்கு (beginning of your document) குறுக்குவழிச்சாவியினை (short cut key) பயன்படுத்தி நகர்த்தவும்.
  17. ஆவணத்தின் தலையங்கமான “Introduction to Word Processing” இனை தட்டச்சிட்ட பின்பு ஏகு மீள் சாவியை (<ENTER>) அழுத்தவும்.
  18. கீழ்வரும் பாடத்தை (text) உங்களது ஆவணத்தின் கடைசிப் பத்தியாக (paragraph) தட்டச்சிடவும்.
    Mechanized word processing began in the early 1900s with the introduction of the mechanical typewriter. The QWERY keyboard on this device was designed to prevent keys from jamming, rather than to increase the speed of data entry by the user. The system was recognized as a vast improvement over handwriting; nonetheless, during the period from 1930 to 1950, various methods of automating the process of producing repetitive documents were attempted.
  19. முதலாவது பத்தியின் (paragraph) கடைசி வசனத்தைத் (last sentence) தெரிவு செய்து (Select) அதனை ஆவணத்தின் கடைசி வரியாக (last line) நகர்த்தவும்.
  20. கடைசிப்பயிற்சியில் நீங்கள் நகர்த்திய (move) வசனத்தை மாற்றீடு (Replace) செய்து உங்களது முழுப்பெயரினை இடவும்.
  21. முதலாவது பத்தியினை (first paragraph) மும்மை அமுக்கு (triple clicking) முறை மூலம் தெரிவு செய்யவும் (select).
  22. தெரிவு செய்த முதலாவது பத்தியினை (paragraph) நகலெடுத்து (Copy) ஆவணத்தின் கடைசிப் பத்தியாக (paragraph) ஒட்டவும்.
  23. உங்களது ஆவணத்தில் எந்த விதமான எழுத்துப் பிழைகளும் (spelling mistakes) இல்லையென்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  24. உங்களது அனைத்து வேலைகளையும் அதே (WordTutorial-01updated.doc) பெயரில் சேமிக்கவும்.
  25. MS Word மென்பொருளை மூடவும்.
Last Updated on Monday, 28 April 2008 15:03